தங்கத்தை தானம் செய்யும் கீர்த்தி சுரேஷ்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

767
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் தான் அதிக பேர் முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால், இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகிகள் இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரை என்ன தான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இவருக்கும் ரசிகர்கள் உண்டு. இவரின் தானா சேர்ந்த கூட்டம் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும், இவர் சாமி 2 மற்றும் சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவர் தற்போது மகாநதி படத்தில் நடித்து வருகிறார்.

மறைந்த பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படம் தான் மகாநதி, இந்த படத்தில் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

நடிகை சாவித்ரி எப்போதும் படத்தில் அவருடன் வேலை செய்தவர்களுக்கு பட வேலை முடிந்ததும் தங்க காசு கொடுப்பது இவரது இயல்பாம்.

அவரைப்போல் கீர்த்தி தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். படத்தில் சாவித்திரியாக கீர்த்து நடித்தாலும், அவரின் நல்ல பண்பை பின்பற்றியது பாராட்டத்தக்கது.