தமிழர் மரபுத் திருநாள்- பிரித்தானியாவில் இடம்பெற்றது!

86
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் “தமிழர் மரபு திருநாள் 2018″ எனும் பொங்கல் விழா 20-01-2018 அன்று பிரித்தானியாவின் குறோய்டன் நகரில் இடம்பெற்றது.

இந்த விழாவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதித்துறைப் பிரதிஅமைச்சர் நீதிராஜா ஏற்பாடு செய்திருந்திருந்தார்.

இவ்விழாவின் பிரதம அதிதியான குறோய்டன் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ரீட் விழாவினை ஆரம்பித்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் இரா.மணிவண்ணன் எழுதிய “ஹைடிங் இன் த எலிபன்ட்” (Hiding In The Elephant) எனும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றம் தொடரபான நூல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பிரித்தானியாவில் நிகழும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும், செயற்பாட்டாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் குஜியந்தன் சிவபாலன் அவர்களின் பரத நாட்டியம் உட்பட பல கலை நிகழ்ச்சிகழும் இடம்பெற்றன.