பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

230
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டமொன்று பதுளையில் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் 22.01.2018 அன்று காலை ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக பதுளை நகரை சென்றடைந்துள்ளது.

குறித்த ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பதுளை மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்தஸநாயக்கவையும் சில அதிகாரிகளையும் பதவி விலக்கி அவர்களை கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஆளுநருக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊவா மாகாண சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.