இலங்கையின் ஒரு பகுதியில் கடவுள் பாதமா? வியப்பில் மக்கள்….

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு இன்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுத்தருவதாகவும் தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

எவ்வாறான போதிலும் இந்த பாதங்கள் அனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் என தெரிவித்து பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 1ஆம் திகதி கணவில் அனுமார் தோன்றி தனக்கு காட்சியளித்ததாகவும், அவர் இந்த பிரதேசத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்து குருக்களிடம் கூறி இந்த பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட போது, பாதங்களை கண்டதாகவும் பாதங்கள் அனுமானின் பாதம் என உறுதியாக கூறினார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*