சிவசக்தி ஆனந்தனிற்கு வருமா சிக்கல்?

84
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டு செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வைத்து, அரசாங்கத்தின் பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 2 கோடி ரூபா பணம் பெற்றுக்கொண்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் இந்த விடயம் குறித்து நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அரசியல் கொள்கைக்கு அமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைவதாக சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதில் அளித்த சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பினர் அரசியல் லஞ்சம் பெற்றுள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார்.

அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவில் மாவை சேனாதிராஜா முறைப்பாடு செய்யப்போவது குறித்து தாம் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.