முதலமைச்சர் கைது!

ஊவாமாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அதிபர் ஒருவரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணிகளுடன் முதலமைச்சர் பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார்.

இதன் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட முதலமைச்சரை பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அடுத்து ஊவா மாகாணமுதலமைச்சர் தனது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்.

இதையடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும், அது தொடர்பான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்குமாறும் அரசியல் உயர் மட்டத்திலிருந்து அழுத்தங்கள் எழுந்துள்ள நிலையில் இன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

13Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*