புதிய பேருந்து நிலையத்துக்கு பயணிப்பதில் பயணிகள் திண்டாட்டம்!!

வவு­னி­யா­வில் பழைய பேருந்து நிலை­யத்­துக்­கும் புதிய பேருந்து நிலை­யத்­துக்­கும் இடை­யில் காணப்­ப­டும் தூர வித்­தி­யா­சத்­தி­னால் தாம் கடும் சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ள­னர் எனப் பய­ணி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

நேர­டி­யா­கப் பய­ணம் செய்­வ­துக்கு எவ்­வித நட­வ­டிக்­கை­யும் இல்லை. விரை­வில் மாற்று நட­வ­டிக்கை வேண்­டும் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

வவு­னி­யா­வில் புதிய பேருந்து நிலை­யம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தும் பழைய பேருந்து நிலை­யப் பணி­கள் நிறுத்­தப்­பட்­டன. அத­னால் பழைய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து தற்­போது எந்­த­வொரு பேருந்­து­க­ளும் சேவை­யில் ஈடு­ப­டு­வ­தில்லை.

பழைய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து சுமார் 2 கிலோ­மீற்­றர் தூரத்­தில் புதிய பேருந்து நிலை­யம் அமைந்­துள்­ளது. புதிய பேருந்து நிலை­யத்­தி­னுள் வடக்கு மாகா­ணத்­தின் அரச, தனி­யார் பேருந்­து­கள் தவிர பிற மாகா­ணங்­க­ளின் பேருந்­து­கள் செல்­லத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் பிற மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு வரும் பய­ணி­கள் சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.

பழைய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து புதிய பேருந்து நிலை­யத்­துக்கு தனி­யார் பேருந்து ஒன்று சேவை­யில் ஈடு­ப­டு­கி­றது. அது இல­வச சேவையை நடத்­தி­னா­லும் உரிய நேரத்­துக்­குப் புறப்­ப­டு­வ­தில் சிக்­கல் காணப்­ப­டு­கி­றது.

பேருந்­தின் ஆச­னங்­கள் அனைத்­தும் நிறை­வ­டைந்த பின்­னரே அது புறப்­ப­டு­கி­றது. அத­னால் கால­தா­ம­தம் நில­வு­கி­றது. மணிக்­க­ணக்­கில் பய­ணி­கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. அத­னால் உரிய மாற்று ஏற்­பாடு தேவை என்று பய­ணி­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

இது­தொ­டர்­பில் அரச பேருந்­து­க­ளின் அதி­கா­ரி­க­ளு­ட­னும் தனி­யார் பேருந்­து­க­ளின் சங்­கத்­து­ட­னும் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­ய­போ­தும் பதில் கிடைக்­க­வில்லை.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*