தாய் ஒருவர் வழங்கிய இரகசிய தகவல்! லண்டனில் பணக்காரர்களாக மாறிய இலங்கை இளைஞர்கள்

லண்டனில் உணவகம் ஒன்று நடந்தும் ஐந்து இலங்கை இளைஞர்கள் பிரபல்யமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Coconut Tree என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றை ஆரம்பித்த குறித்த இளைஞர்கள் தற்போது பெரிய அளவில் அதனை விஸ்தரித்துள்ளனர்.

லண்டன், Cheltenham பகுதியில் வசிக்கும் இந்த இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிய இடம் ஒன்றில் உணவகத்தை ஆரம்பித்த குறித்த இளைஞர் தற்போதே தங்கள் வாழ்க்கையை கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களின் வளர்ச்சிப் பாதை குறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட இலங்கை இளைஞர்கள்,

“ஆரம்பித்தில் வாடகைக்கு சிறிய பப் ஒன்றை பெற்றுக் கொண்ட நாம், வேலை முடிந்து வந்து அங்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தோம், அதன் ஊடாக வளர்ச்சியடைந்து இன்று Coconut Tree என உணவகத்தை வளர்த்துள்ளோம்.

அனைத்து விருந்தோம்பல் ஆர்வலர்களை நாங்கள் வரவழைத்தோம், இரகசிய சமையல் குறிப்புகளை இலங்கையில் உள்ள தாயாரிடம் பெற்றுக் கொண்டோம்.

இலங்கையில் எங்கள் தாய்மார் சிறப்பாக சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அது எங்கள் உணவகத்திற்கு மேலும் உதவியாக இருந்தது.

Coconut Tree வளர்ச்சியடைந்தது. விருந்து மற்றும் நிகழ்வுகளுக்கு சமைக்க ஆரம்பிதோம். எங்களுக்கு பெரிய இடம் தேவைப்பட்டது. எதிர்பாராத விருந்தினர்கள் எங்கள் இடத்தை தேடி வர ஆரம்பித்தனர்.

நாங்கள் தெரு உணவுகள் வழங்கினோம். எங்கள் உணவை பெற்றுக் கொள்ள அனைவரும் விரும்பினார்கள். எங்கள் உணவை பலர் இரசித்து உண்ண ஆரம்பித்தனர். தெரு உணவாக வழங்கிய நாம் அமர்ந்து உண்ணும் இடமாக அதனை மாற்றினோம். அதுவே எங்கள் நோக்கமாகவும் இருந்தது.

இலங்கை உணவுகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளை வழங்கினோம். நாங்கள் அப்பம், கொத்து ரொட்டியை லண்டனில் அறிமுகப்படுத்தி வைத்தோம். 2.50 பவுண்ட்கள் முதல் உணவு வழங்கினோம்.

நாங்கள் ஆடம்பரத்தை அறிந்திருக்கிறோம். உலக நகரங்கள் வழங்கியுள்ளவற்றில் ஒரு சிறிய பகுதியை நாம் பார்த்துள்ளோம், சிறியவைகளை விரும்பியவர்களும் அதிமாகும்.

சிறிய முறையில் பிறந்த நாள் வைபவங்களை நாம் அங்கு நடத்தினோம். வயிறு நிறைய உணவை சிறிய விலையில் வழங்கினோம். தற்போது பெரிய வளர்ச்சியை கண்டுள்ளோம்” என குறித்த இலங்கை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

18Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*