சொந்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்! இலங்கையில் பதறவைக்கும சம்பவம்

கைத்தொலைபேசியை பயன்படுத்தி தமது தாயை கொலை செய்த மகனை பதுளை – ஊவா பரணகம பகுதியில் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கைத்தொலைபேசியை தமது தாயின் தொண்டைக் குழிக்குள் நுழைத்து இந்தக் கொலையை மகன் புரிந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் 61 வயதுடைய தாயே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

தமது தாய் மர்மமான முறையில் மரணித்துள்ளதாக, சந்தேகத்துக்குரியவரான மகன், காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, அதனை சந்தேகத்துக்குரிய மரணமாகக் கருதி, மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த மரணம்மூச்சு திணறச் செய்து இடம்பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், சந்தேகத்துக்குரிய மகனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, கைத்தொலைபேசியை தொண்டைக்குள் செலுத்தி தாயை கொலை செய்ததாக மகன் கூறியுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*