சிறைச்சாலையில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாள்!

52
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

உழவர் திருநாளாம் தைத்திருநாளை உலக வாழ் அனைத்து தமிழர்களும் சிறப்பாக இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், திருகோணமலை சிறைச்சாலையிலும் தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வா தலைமையில் குறித்த பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.

சிறைச்சாலை வளாகத்தினுள் அமையப்பெற்றுள்ள பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, அனைத்து சிறைக்கைதிகளும், கலந்து கொண்டதுடன் திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை காவல் அதிகாரி ஜே.ஏ.பி.ஆர்.சஞ்ஞீவ, புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை பாதுகாவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.