வவுனியாவில் கோர விபத்து

463
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

வவுனியா புகையிரத நிலைய வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து பேர் பயணம் செய்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களை தவிர ஏனைய இருவரையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்கள் தொடர்பிலான விபரங்களும், விபத்துக்கான காரணம் குறித்தும் சரியாக தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.