இலங்கையை அதிர வைத்த காணொளி! குற்றவாளிகளிற்கு நடந்த கதி….

மாணவர்கள் இருவரை வைத்து ஆபாச காணொளியைப் பதிவுசெய்து இணையதளங்களுக்கு விற்று வந்த சந்தேகத்தில் காலி, களுவெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று (12) உத்தரவிட்டுள்ளது.

பிரத்தியேக வகுப்பு சார்பில் விகாரையொன்றில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான நிதிவசூலிப்பில் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, பெருமளவு நிதியுதவி செய்வதாகக் கூறி குறித்த மாணவர்கள் இருவரையும் சந்தேக நபர்கள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து, மாணவர்கள் இருவரையும் வைத்து ஆபாசக்காணொளியை சந்தேக நபர்கள் தயாரித்துள்ளனர்.

சில நாட்களின் பின், இந்தக் காணொளியை இணையதளத்தில் தற்செயலாகப் பார்த்து அதிர்ந்த அயலவர் ஒருவர், குறித்த மாணவர்களின் பெற்றோரிடம் அது பற்றித் தெரிவித்துள்ளார்.

அவர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில், சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*