அதிசயமானதும் , அழகானதும் ஆன தீர்த்த கேணி – மதுரை மாரியம்மனின் தெப்ப குளம்

37
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மதுரையிலுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தென்னிந்தியக் கோயில் தெப்பக்குளங்களிலேயே மிகப்பெரியது. இதை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்கின்றனர்.

மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது.இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன்கூடிய விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு இணைப்பு உள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள பெரிய தெப்பக்குளமாகும்.

.இக்குளத்தில் தை மாதம் நிகழும் தெப்போற்ஸவம் விசேஷமானது. தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேஷ்வரருக்கும் தெப்பத்திருவிழா எடுக்கப்படுகிறது. வண்ணமயமான இந்தத் தெப்பத்திருவிழாவைக் காண அதிகமான மக்கள் மதுரை வருவார்கள்.இப்படி பெருமைகள் வாய்ந்த இந்தக் குளத்தின் அருகிலேயே மாரியம்மன் கோயில் கொண்டிருப்ப தால் கூடுதல் சிறப்புப் பெற்றுவிட்டது. இத்தெப்பம் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே, முக்குறுணிப் பிள்ளையார் என மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளார்.

மாரியம்மன் கோயிலில் தீர்த்தப் பிரசாதம் விசேஷம். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இந்தத் தீர்த்தம், கோயில் நிர்வாகத்தினரால் பித்தளை அல்லது செம்புப் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கண் நோய், அம்மை நோய், தோல் நோய் மற்றும் நாள்பட்ட வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தீர்த்தம், பிணிகள் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது என்பது நம்பிக்கை. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

video link: https://www.youtube.com/watch?v=_DLAPzh_sTI