மன்னார் வைத்­தி­ய­சா­லை­யில் இப்படி ஒரு அவலம்

மன்­னார் மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லை­யில் ஏற்­பட்­டுள்ள உள்­ளகப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் தொடர்ந்­தும் மக்­கள் விச­னம் தெரி­வித்து வரு­கின்ற நிலை­யில் குறித்த பிரச்­சி­னை­களை சீர் செய்ய மன்­னார் பொது வைத்­தி­ய­சாலை நிர்­வா­கம் முயற்­சி­கள் எத­னை­யும் மேற்­கொள்­ள­வில்லை என மக்­கள் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

Loading...

மன்­னார் பொது வைத்­தி­ய­சா­லை­யில் உள்ள நோயா­ளர் விடுதி 2 இல் உள்ள மல­சல கூடம் தொடர்ச்­சி­யாக நிரம்பி வழி­கின்­றது.

எனி­னும் குறித்த விடு­தி­யில் உள்ள நோயா­ளர்­கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு மத்­தி­யில் குறித்த மல­சல கூடத்தையே பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

குறித்த நோயா­ளர் விடுதி தற்­கா­லிக விடு­தி­யாக காணப்­ப­டு­கின்ற போதும் அதி­க­ள­வான நோயா­ளர்­கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

மேலும் நோயா­ளர் விடுதி 3 மற்­றும் 4க்குச் செல்­லும் பகு­தி­யில் கழிவு நீர் தேங்கி நிற்­கின்­றது. அத்­து­டன் நுளம்­பின் பெருக்­கம் அதி­க­ரித்­துள்­ளது என­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனவே குறித்த பிரச்­சி­னை­களை நிவர்த்தி செய்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அதி­கா­ரி­கள் முன்­வர வேண்­டும் என மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

8Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*