மனைவியை அச்சுறுத்த, கணவன் செய்த செயல்

321
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மனைவியை அச்சுறுத்தும் நோக்கில் சவப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு நபர் ஒருவர் கோரியுள்ளார்.

குளியாப்பிட்டி நகரில் இந்த விநோதச் சம்பவம் பதிவாகியுள்ளது.நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் மலர்ச்சாலைக்கு சென்று சவப்பெட்டிகளின் விலைகளை விசாரித்துள்ளார்.

ஏனைய அலங்காரங்கள், பெரிய பித்தளை விளக்கு என்பன தேவையா என்று மலர்ச்சாலையின் முகாமையாளர் வினவியுள்ளார்.

அதன்போது இல்லை எனக்கு சவப்பெட்டி மட்டும் போதும் என்று குறித்த நபர் பதிலளித்துள்ளார். சவப்பெட்டியை நன்றாக மெருகூட்டி செய்து தருமாறு முகாமையாளரிடம் கூறியுள்ளார்.

சவப்பெட்டி மட்டும் தேவையென்றால் 18 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க முடியும் என்று முகாமையாளர் கூறியதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் ரூபா முற்பணமாக செலுத்தியுள்ளார்.

மாலை 4.00 மணிக்கு சவப்பெட்டியை தமது வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறும், மிகுதிப் பணத்தை வீட்டில் வைத்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கேட்ட மலர்ச்சாலை முகாமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். வெறும் சவப்பெட்டிகளை வீடுகளுக்கு அனுப்பி வைக்க முடியாது.

நீங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றீர்களா?, என்று முகாமையாளர் வினவியுள்ளார்.

இல்லை, எனது மனைவியை அச்சுறுத்தவே இந்த பெட்டியை கொள்வனவு செய்கின்றேன், வீட்டில் எனது அறையில் இந்தப் பெட்டியை வைத்துக் கொள்ளப் போகின்றேன், எனக்கூறி மலர்ச்சாலையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

சவப்பெட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மறுநாள் காலை மலர்ச்சாலைக்கு சென்று முற்பணத்தை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.

குடிபோதையில் மனைவியை அச்சுறுத்த இவ்வாறு சவப்பெட்டியைக் கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.