பல்கலைக்கழக மாணவர்களை பலிகொடுத்த கஜேந்திரன் தொடர்பில் உண்மைகள் அம்பலம்

299
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் அதன் பின்னர் மாணவர் பேரவைத் தலைவராகவும் அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காலங்களில் திரு.கஜேந்திரன் அப்பாவி மாணவர்கள் பலரின் உயிர் இழப்புக்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்தார் என்பது மறுக்கப்படமுடியாதது.

பொங்கு தமிழ் மூலம் மாணவர்கள் மத்தியில் எழுந்த உணர்ச்சிப் பெருக்கை தனக்குச் சாதகமாக்கியவர் கஜேந்திரன்.

2006-2009 வரையான இறுதிப் போர் நெருக்கடியின் போது யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேறி பின் வெளிநாடுகளில் தங்கியிருந்து தான் தப்பிக் கொண்டார் கஜேந்திரன்.

ஆனால் அவருக்காக பாடுபட்ட புங்குடுதீவு மாணவன் சசிக்குமார் கடற்படையால் கடத்தப்பட்டு காணாமல் போனார்.

பின் கஜேந்திரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கொல்லப்பட்டுவிட்டதாக உறுதி செய்தார்.

தொழில்நுட்பக்கல்லூரி மாணவன் பிரதீபன் விஞ்ஞானபீட மாணவன் சிவசங்கர் என மாணவர்களை சுட்டுக்கொல்ல ஆரம்பித்தது இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறை.

அதன் வழியாக வரணிப் பகுதியைச் சேர்ந்த கமல் எனும் மாணவன் சாவகச்சேரியைச் சேர்ந்த ரஞ்சன் எனும் மாணவன் என வரிசையாக சுட்டுக்கொல்லப்பட்ட போது நோர்வேயிலும் சுவிசிலும் தங்கியிருந்தார் கஜேந்திரன்.

படுகொலை வரிசைகள் நீண்டு யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் நிலக்சன், குணா எனவாகி இறுதியில் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் புருசோத்தமனில் முடிவு பெற்றது.

இதற்கிடையில் ஏராளமான பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பின் தெருவோரங்களில் போடப்பட்டனர்.

இதன் போதெல்லாம் அதற்கு பொறுப்புச் சொல்லி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தார்மீகக் கடமையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இவ் மாணவர்களை தூண்டியவர் எனும் வகையில் இருந்த கஜேந்திரன் வெளிநாட்டில் பாதுகாப்பாகவிருந்தார்.

அவரது கூடப்பிறந்த தம்பியான பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் எனும் அடிப்படையில் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விடுதியில் தங்கியிருந்தபோது கடத்தப்பட உடனடியாக நாட்டுக்குத் திரும்பி வந்து அப்போதைய அரசுடன் சமரசம் செய்து தனது தம்பியை மீட்டெடுத்தார்.

இத்தகையவர் மீண்டும் இளைய சமூகத்தை தூண்டி அதில் தான் குளிர்காய விழைவதை ஏற்கலாமா?