ஜப்பானில் அகதி அந்தஸ்து கோரும் இலங்கையரா நீங்கள்?

232

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து ஜப்பானில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களுக்கு அடுத்த வாரம் முதல் புதிய நடைமுறை அமுலாகவுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் இந்த நடைமுறையானது அகதி அந்தஸ்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமுலாகவுள்ளது.

ஜப்பானில் கொண்டு வரப்படவுள்ள புதிய நடைமுறையின்படி, முதல் விண்ணப்பத்தின் போதே அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பதாரியை நாடு கடத்தவோ அல்லது அகதி முகாமிற்கு மாற்றவோ தீர்மானிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உண்மையான அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜப்பானின் நீதி அமைச்சர் யோகோ காமிகாவா தெரிவித்துள்ளார்.