பரந்தன் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாரவூா்தி விபத்து

225
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பரந்தன் பூநகரி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாரவூா்தி  விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துச் சம்பவம் பரந்தன் ஓசியர் கடை சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்றது.

தம்புள்ளையில் ஈரந்து யாழ்ப்பாணத்துக்கு மரக்கறி ஏற்றி சென்ற பாரவூா்தி கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் உள்ள நீர் வடிகாண் கட்டமைப்பில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டதுடன் பாரவூா்தி பாரிய சேதங்களுக்கள்ளானது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.