தண்டனை உறுதி: ஜனாதிபதி

ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான தராதரங்களும் பாராமல் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

யார் தவறு செய்தாலும் கட்சி, பதவி, அந்தஸ்து என்பவற்றைப் பொருட்படுத்தாது தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பின்நிற்கப் போவதில்லை.

மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவ்வண்ணமே நிறைவேற்றுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டதுடன், விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*