யாழ். பல்கலைக் கழக மாணவரிடையே மோதல்!!

149

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், குறித்த பகுதியில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலில் காயமடைந்த கலைபீட மாணவர்கள் நால்வரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் தப்பிச்சென்றுள்ளனர்.

இதில், பத்மநாதன் விஷ்ணுகீர்த்தன் மற்றும் கேதீஸ்வரன் கிருஷாந்தன் ஆகியோரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.