தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கைது

87
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று காலை கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல்வீட்டு குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அயல்வீட்டு பெண்ணை வேட்பாளர் தாக்கியதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்த நிலையில் நாகராசா பகிரதன் இன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர், மானிப்பாய் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.