பசுவை இறைச்­சிக்­குக் கொன்று கன்றை வீதி­யில் வீசிய கொடூ­ரம்!! நாவாந்­துறை மக்கள் கொதிப்பு!!

கன்று ஈனும் நிலை­யி­லி­ருந்த பசு­வைக் கொன்று இறைச்­சி­யாக்­கி­ய­வர்­கள் பசு­வின் வயிற்­றில் இருந்த கன்­றுக்­குட்­டி­யைக் கழி­வு­க­ளு­டன் வீசி­ விட்டுச் சென்­ற­னர். அந்­தக் கன்­றுக் குட்­டி­யும் உயி­ரி­ழந்­தது. இந்­தச் சம்­ப­வத்­தால் நாவாந்­துறை மக்­கள் கொதிப்­ப­டைந்­த­னர். அந்­தப் பகு­தி­யில் சற்­றுக் குழப்­ப­மும் ஏற்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் நாவாந்­து­றைச் சந்­தையை அண்­மித்து நேற்று மாலை கன்­றுக்­குட்டி உயி­ரற்ற நிலை­யில் வீசப்­பட்­டி­ருந்­தது. கடத்­தப்­பட்ட பசு கொல்­லப்­பட்டு இறைச்­சி­யாக்­கப்­பட்டு அதன் வயிற்­றி­லி­ருந்த வளர்ச்­சி­ய­டைந்­தி­ருந்த கன்று வீச­பட்­டி­ருக்­க­லாம் என்று மக்­கள் தெரி­வித்­த­னர்.

சந்­தைக்கு அரு­கி­லுள்ள குப்­பை­கள் போடு­மி­டத்­தில் எண்­ணை­ப­ரல் ஒன்­றுக்­குள் பசு­வின் தோல், என்பு உள்­ளிட்ட கழி­வு­க­ளை­யும் அத­னு­டன் விட்­டுச் சென்­ற­னர். பசு­வின் காதில் அடை­யா­ள­மாக இடப்­ப­டும் இலக்­கத் தகடு என்­பன போடப்­பட்­டி­ருந்­தன. கழி­வு­களை உரைப்­பை­யில் மூட்­டை­யா­கக் கட்­டிப்­போட்­டு­விட்­டுச் சென்­றுள்­ள­னர். தெரு­நாய்­கள் அவற்றை உரைப்­பை­யில் இருந்து வெளியே இழுத்­தெ­டுத்­துள்­ளன.

மக்­கள் உரைப்பை மூட்­டையை திறந்து பார்த்­துள்­ள­னர்.

அப்­போது கன்­றுக்­குட்­டி­யு­டன் சேர்த்து வெட்­டப்­பட்ட மாட்­டின் இறை­சிக் கழி­வு­கள் இருந்­ததை கண்டு அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

“நாவாந்­துறை கடை­யில் உள்ள மாட்டு இறை­சிக் கடை பல­வற்றை ஒரு­வரே குத்­த­கைக்கு எடுத்து நடத்­து­கி­றார். அவற்றை நடத்­து­ப­வர்­களே இந்­தச் செய­லைச் செய்­தி­ருக்­க­லாம் என்று நாங்­கள் சந்­தே­கிக்­கி­றோம்” என்று அங்கு நின்­றி­ருந்­த­வர்­கள் குற்­றஞ்­சாட்­டி­னர்.

சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலி­ஸார் மற்­றும் சுகா­தார பரி­சோ­த­கர்­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

குறித்த பசு கால்­ந­டைத் திணைக்­க­ளத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளமை அதன் காதில் இணைக்­கப்­பட்­டி­ருந்த இலக்­கத்­தின் மூல­மாக உறு­திப்­ப­டுத்த முடிந்­தது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*