வவுனியாவில் கணவனையும் குழந்தைகளையும் விட்டு இளம் குடும்பப் பெண் மாயம்

வவுனியா – புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா தினேஸ்குமார் என்ற குடும்பப் பெண் காணாமல் போயுள்ளார்.

கடந்த 08.01.2018 திங்கட்கிழமை மதியம் முதல் இவரை காணவில்லை என குறித்த பெண்ணின் கணவர் தினேஸ்குமார், பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த இரண்டு குழந்தைகளும் தமது தாயைத் தேடி ஏக்கத்தில் காய்ச்சலால் அவதிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பெண்ணை காண்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவுக்குமாறும், 077-0745487 என்ற தனது தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் கணவன் தினேஸ்குமார் வேண்டியுள்ளார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*