வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசுகிறேன்….! என் உயிரிலும் மேலாக என் தமிழீழ மக்களை இன்றும் நேசிக்கிறேன்.

226
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

உங்களை தலைமையற்று தொருவில் நிற்கும்படி செய்துவிட்டு நான் மாண்டுபோகவில்லை.இருண்ட யுகம் ஒன்றுக்குள் நெருக்கப்பட்டு அழிவடையும் தறுவாயில் இருந்த எம் இனத்தின் பிள்ளையாக உங்கள் மத்தியில் தோன்றி,உங்களை உலகமெலாம் பரவி நிற்கும் மானுட சக்திகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறேன்.

நானும் என் பிள்ளைகளும் பல்லாயிரம் மாவீரம்களும் உங்களை விட்டு பிரிந்திருந்தாலும் எம் அனைவருடைய ஆன்மாக்களும் உங்களை சூழ்ந்து காப்பரண்களாக வழிநடாத்திக்கொண்டே இருக்கின்றன.

உங்கள் மீது திணிக்கப்படுவனவற்றையும்,உங்களை ஏமாற்ற முற்படுவோர் பற்றியும் ,நாம் அவதானித்தபடியே உள்ளோம்.எந்த சூழ்நிலை வந்திடினும் நீங்கள் கொண்ட அடங்காத தாகத்தை தாங்கிப்பிடித்து நிற்பதையும் நாமறிவோம்.

அன்புள்ள என் மக்களே!

மாறிவரும் உலகியல் என்னையும் எனது இயக்கத்தையும் அழித்துவிடும் என்பதை நான் நன்கறிந்திருந்தேன்.ஆனாலும் நானும் நீங்களும் கொண்ட தமிழீழ தாகத்தை அழித்துவிட முடியாது என்பதையும் நான் அறிந்து வைத்திருந்தேன்.

அதனால்தான் எனது ஆயுங்கள் பலமாக இருந்த காலப்பகுதியில் உங்களுக்கான,இந்த உலகம் ஏற்றுக்கொள்வதாக கூறும் ஜனநாயக பாதை ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டேன்.

அதன் வழியே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் ஜனநாயக கட்டமைப்பொன்றை உருவாக்கினேன்.எனது மரணத்தின் பின் அவர்களை உங்கள் தலைவர்களாக்க எண்ணினேன்.

எங்கெங்கோவெல்லாம் சிதைந்து திராணியற்றுக்கிடந்த பலரை ஒன்றிணைத்து பல உயிர்களை இழந்து அந்த கட்டமைப்பை உருவாக்கினேன்.

என்னுயிரையும் என் குடும்பத்தின் உயிரையும் இழந்து இறுதி நேரத்தில் கூட அந்த கட்டமைப்புக்கு ஆன்மீக அபிசேகம் செய்தேன்.

ஆனால் அவர்கள் இன்று என்னையும் மறந்து,என் கட்டளையை ஏற்று உங்களுக்காக மாண்டுபோன அத்தனை மாவீர செல்வங்களையும் மறந்து சிங்கள பேரினவாத்த்தின் கூலிகளாக மாறிவிட்டனர்.இதை நான் அவதானித்தபடியே உள்ளேன்.என்னோடு இன்றுவரை கலந்திருக்கும் மாவீர குழந்தைகளும் இதைத்தான் பேசிக்கொள்கின்றனர்.

என் அன்புக்கினிய தமிழீழமக்களே!

நீங்கள் அநாதைகள் அல்ல.நீங்கள் வலுவற்றவர்கள் அல்ல.சிலரை சில காலம் ஏமாற்றலாம்.ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது.உங்களை ஏமாற்ற முடியாது.

எனது மகன் என்பதால் மட்டுமே சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் மீண்டும் உமக்காக ஈழ மண்ணிலே அவதரித்துள்ளான்.அவன் வளர்ந்து அறிவேற்று,என்னிலும் பல மடங்கு பலம் கொண்டு உங்களுக்கு தலமை ஏற்பான்.

அதுவரை,எம்முள்ளே இன்று வரை எரிந்து கொண்டிருக்கும் இலட்சிய நெருப்பை அணைத்துவிடாதீர்கள்.எந்த நிலை வரும்போதிலும் துவண்டு விடாதீர்கள்.ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் போராட்டம் என்பது பல அழிவுகளை கொண்டது.பல வருடங்கள் நீடித்து செல்லக்கூடியது.அதிகபட்ச தோல்விகளை தரக்கூடியது.ஆகவே எந்த நிலை வந்திடினும் துவண்டுவிடாதீர்கள்.தொடர்ந்தும் வடிவங்களை மாற்றி போராடுவோம்.எமது அடுத்த தலைமுறைக்கு விடுதலையை பெற்றுக்கொடுப்போம்.

எல்லோரையும் ,எல்லாவற்றையும் அவதானித்தபடி உங்களுக்காக உங்கள் மண்ணிலே கலந்துள்ளேன்.