பிரித்தானியாவை மிரட்டும் வைரஸ்! 30 பேர் பலி – 4.5 மில்லியன் பேருக்கு தொற்று

பிரித்தானியாவில் பரவி வரும் Aussie flu வைரஸ் காய்ச்சல் காரணமாக இது வரையில் 30 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், கடந்த வாரத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக 4.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லண்டன் மற்றும் டோரஸ்டின் டோர்செஸ்டர் ஆகிய நகரங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர்கள, இளைஞர்கள, யுவதிகள் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் Aussie flu வைரஸ் தொற்று பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும், பிரித்தானியா முழுவதும் மிக வேகமாக இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளிர் காலத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் இன்னும் வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பிரான்சிலும் நோய் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு இந்த வைரஸ் காய்ச்சல் அவுஸ்திரேலியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது போன்ற ஆபத்து பிரித்தானியாவில் இம்முறை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், Aussie flu வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்வது சிறந்த வழிமுறையாகும் என வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர். நோய் தொற்றின் பொதுவான அறிகுறிகள்

• அதிக காய்ச்சல்

• உடல் வலிகள்

• உடல் சோர்வு

• தலைவலி

• வறட்டு இருமல்

காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட,

• நல்ல ஓய்வும் தூக்கமும் அவசியம்

• உடல் வறட்சியை தடுக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்,

• சிறுநீர் இள மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

• உடல் வெப்பநிலை மற்றும் வலிகளை குறைக்க paracetamol அல்லது ibuprofen மாத்திரைகளை சாப்பிடலாம்.0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*