கள்ளக்காதலால் பறிபோனது இரு உயிர்கள்!! பேத்தியினால் பொலிஸாருக்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்

393
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

வவுனியா – மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை 10 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் வவுனியா நெடுங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவருடன் செல்வம் புஸ்பராணிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றையதினம் மாலை இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு இருவரும் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததுடன், குறித்த நபரும் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த குறித்த பெண்ணின் பேத்தி அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அயலவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.