கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்- மன்னார்

73

08/01/2018 காலை 8:30 மணி முதல் 11:15 மணிவரை எமது மன்னார் மாவட்ட கர்ப்பிணி தாய்மார்கள் எமது மாவட்ட வைத்திய சாலையில் VOG மருத்துவர் இல்லாத காரணத்தால் இன்றைய கிளினிக் நாளை புறக்கணித்து. மருத்துவமனை எதிரிலுள்ள சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாவட்ட வைத்திய சாலையில் கடந்த நான்கு மாதகாலமாக VOG மருத்துவர் இல்லாத காரணத்தால் மாற்று மருத்துவ மனைகளுக்கு பிற மாவட்ட வைத்திசாலைக்கு பிரசவத்திற்காக நோயாளர் காவு வண்டி AUMBULANCE மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர் (வவுனியா,யாழ்பாணம்,அநுராத புரம்)

இதன் போது கடந்த மாதம் மட்டும் 17பிரசவங்கள் வாகனத்திலேயே சாலைகளில் நடைபெற்றுள்ளது இது மிகவும் கவலைக்குறிய விடையம்.

அத்துடன் vog இல்லாத காரணத்தால் ஸ்கேன் மற்றும் பரிசோதனைகள் தடை ஏற்படுகிறது.

எனவே எமது மாவட்ட கர்ப்பிணி தாய்மார் சரியான மருத்துவ பராமறிப்பு இன்றி பாதிக்கப்பட்டனர்.

இவற்றிற்கு தீர்வு காணும் முகமாக இன்று கிளினிக் நாளில் 250 மேற்பட்ட கர்ப்பிணிகளும் 300அதிகமான கர்ப்பிணியின் கனவர்கள்,தாய் ,தந்தையர்கள்,உறவினர்கள்,சமூக ஆர்வலர்கள் ,நலன் விரும்பிகள் என அனைவரும் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

ஐயா சனாதிபதி அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே

எமது மன்னார் மாவட்ட வைத்திய சாலைக்கு உடனடியாகVOG மற்றும் எமது மருத்துவமனையில் இன்னும் பல நிபுனத்துவர்கள இல்லாமல் இருப்பதால் எமது மக்களின் நலவாழ்வை பாதுகாக்க உடனடி நிரந்தர வைத்தியர்களை வேண்டி நிற்கின்றோம்.

இன்றை நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நண்பர்கள் கர்ப்பிணி தாய்மார்கள்,காவல் துறையினர் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் .

நன்றிகள்.