காதலித்த சிறுவனுடன் சென்ற சிறுமி மீது பாலியல் துர்நடத்தை!

13 வய­து­டைய பாட­சாலை மாண­வியை காத­லித்து பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­தி­னார் என்று குற்­றம் சாட்­டப்­பட்ட 17 வய­துச் சிறு­வன் கைது செய்­யப்­பட்டு விளக்கமறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரிவித்­த­னர்.

Loading...

இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது. காத­லித்த இரு­வ­ரும் பெற்­றோ­ருக்­குத் தெரி­யாது வீட்டை விட்டு வெளி ­யே­றிய நிலை­யி­லேயே இந்­தச் சம்­ப­வம் இடம்பெ ற்றுள்­ளது. மாணவி வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­யமை தொடர்­பில் மாண­வி­யின் பெற்­றோர் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­தி­ருந்தனர்.

சம்­ப­வம் தொடர்­பான விசா ரணை­கள் மேற்­கொள்­ளப் பட்டன. சிறு­வ­னும், மாணவி யும் பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. விசா­ர­ணை­க­ளில் சிறுமி பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டமை தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து குறித்த சிறு­மி­ மருத்துவ மனையில் சேர்க்­கப்­பட்­டார். சிறு­வன் கைது செய்­யப்­பட்டு வவு­னியா மாவட்ட நீத­வான் மன்­றத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். நீதி­மன்ற விசா­ர­ணை­களை அடுத்து சிறு­வனை 14 நாள்­கள் விளக்­க­ ம­றி­ய­லில் வைக்கு மாறு நீத­வான் உத்­த­ர­விட்­டார். மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­பெறு கின்­றன என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்

19Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*