மன்னாரில் கடந்த மாதம் 17 பிரசவங்கள் நோயாளர் காவு வண்டியில் (AMBULANCE) நிகழ்ந்துள்ளது.

189
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மன்னார் பொது வைத்தியசாலையில் VOG மகப்பேறு மருத்துவர் இல்லாமையினால் வவவுனியா,யாழ்ப்பாணம் போன்ற மருத்துவ மனைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணி தாய்மார்கள் 5 பேர் விகிதம் அனுப்ப படுகின்றனர் .

இதன் போது நடுவழியில் பிரசவ வலி ஏற்பட்டு சென்ற மாதம் மட்டும் 17 சாலை பிரசவங்கள் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு பிரசவம் பார்கையில் மிகுதியுள்ள 4 கர்ப்பிணி தாய்மாரும் சாலையில் இறக்கி விடப்படுவர் என்பது கவலைக்குறிய விடையம்.

மன்னார் மாவட்டத்தில் அடம்பன்,மடு,முருங்கன்,சிலாவத்துறை போன்ற மருத்துவ மனைகளிலிருந்து மாவட்ட வைத்திய சாலைக்குத்தான் வரவேண்டியுள்ளது.

மாவட்ட வைத்திய சாலையில் மகப்பேறு மருத்துவர் இல்லாமையானது எமது மக்களை பலி எடுக்கும் செயல்.

எமது மான்னாரில் தான் வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளார், வட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் உள்ளார். இரண்டு பாராளுமன்ற உறுப்பினரும்,

ஒரு மேன்மை தாங்கிய அமைச்சரும் உள்ளனர் என்பது எமது மக்களுக்கு சவ குழி வெட்டும் கேவலமான நோக்குடையவர்கள் .என்பது நிறுபனமாகிறது.

இதை இவர்களிடம் கேட்டுப்பாருங்கள் மாறி மாறி குறை சொல்லி உங்கள் வாக்குகளை வாங்கி ஏப்பமிட வருவார்கள்.

ஐயா சனாதிபதி அவர்களே எமது மக்களுக்கான மருத்துவர்களை உடனடி நியமனம் செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஆணைவழங்கி மக்கள் பிரச்சனையை களைந்திடுங்கள்.

மக்களே அவதானம் .

கணவர்மாரே உங்கள் மனைவிமாரின் உயிரைக்காத்திட விழித்திடுங்கள்.

நண்பர்களே இந்த செய்தியை அனைவருக்கும் அறிய பகிரவும்.