லசந்தவை மஹிந்த கொலை செய்தது ஏன்??

399

கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கம்பல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 71வது ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உக்ரைன் நாட்டுடன் மஹிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்ததாகவும் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளை, லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலையுடன் கடந்த ஆட்சியாளர்களே தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.