வவுனியா நெளுக்குளத்தில் சீனிப்பாணி காய்ச்சி தேன் என விற்பனை செய்யும் பெண் உட்பட இருவர் கைது

263

வவுனியா நெளுக்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் சீனிப்பானியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த பெண் உட்பட இருவரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் சீனிப்பானியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பரிசோதர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (06.01.2018) மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம் , பொது சுகாதார பரிசோதகர் வோல்ட்டயன் ஆகியோரின் தலமையிலான குழுவினர் நெளுக்குளம் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் வீடோன்றில் சீனிப்பானி காய்ச்சிய 38வயதுடைய பெண்ணோருவரையும் 26வயதுடைய ஆணோருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து போத்தலின் தேன் என அடைக்கப்பட்டிருந்த 73 போத்தல் சினிப்பாணியையும் சுகாதார சீர்கேடான முறையில் காய்யப்பட்ட 2 அரை பீப்பாய் சீனிப்பாணியையும் பட்டா வாகனமோன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்திய போது நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.