அம்­பாந்­தோட்­டை­யில் சீனக் கொடி குமு­றிக் கொதிக்­கி­றது புது­டில்லி

Loading...

அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­தில் சீனா ­வின் தேசி­யக் கொடி பறக்­க­வி­டப்­பட்­டுள்ள விவ­கா­ரம் இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கு­மி­டை­யில் இரா­ஜ­தந்­திர முறு­கல்­நி­லை­யொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக நம்­ப­க­ர­மாக அறி­ய­மு­டி­கின்­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் கடந்த செப்­ரெம்­பர் மாதம் 9ஆம் திகதி சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டது. கடந்த முத­லாம் திக­தி­மு­தல் அங்கு சீனா­வின் தேசி­யக் கொடி பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளது.

முன்­னர் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தில் இலங்­கை­யின் தேசி­யக் கொடி­யும், துறை­முக அதி­கா­ர­ச­பை­யின் கொடி­ யும் பறக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன. ஏனைய கொடி­க­ளை­விட, இலங்­கை­யின் தேசி­யக்­கொடி சற்று உய­ர­மா­கப் பறக்­க­வி­டப் பட்­டி­ருந்­தது.

பின்­னர் இலங்­கை­யின் தேசி­யக்­கொடி ஏற்­றப்­பட்ட கம்­பத்­தின் உய­ரம் குறைக்­கப்­பட்டு சீனா­வின் தேசி­ யக்­கொ­டிக்கு சம­மாக கீழி­றக்­கப்­பட்­டது.

சீனா­வின் தேசி­யக் கொடி ஏற்­றப்­பட்­டுள்ள விட­யம் புது­டில்­லிக்கு கொழும்­பி­லுள்ள இந்­திய தூத­ர­கத்­தால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அது தொடர்­பில் இந்­திய நடு­வண் அரசு கடும் அதி­ருப்­தி­யில் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நடு­வண் அர­சின் இந்த விச­னம் இரா­ஜ­தந்­திர ரீதி­யில் கொழும்­புக்கு தெரி­விக்­கப்­ப­டு­மென கொழும்­பி­லுள்ள இந்­தியத் தூத­ரக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் இரா­ணு­வத் தேவை­க­ளுக்கு சீனா­வால் பயன்­ப­டுத்­தக் கூடா­தென முன்­னர் இந்­தியா இலங்கை அர­சி­டம் இரா­ஜ­தந்­திர மட்­டத்­தில் வேண்­டு­கோ­ளொன்றை விடுத்­தி­ருந்­தது.

அதற்கு சீனா­வும் சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால், சீனா­வின் தேசி­யக் கொடிக்கு அம்­பாந்­தோட்­டை­யில் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­பட்­டி­ருப்­பது சீனா­வின் ஆதிக்­கத்­தின் ஆரம்­ப­மெனக் கரு­தும் இந்­தியா, அதன் கார­ண­மா­கவே தனது எதிர்ப்பைத் தெரி­விக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­ மு­டி­கின்­றது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*