நேற்றைய இளவரசரின் இன்றைய பரிதாபம்! வீடு வீடாக அலையும் நாமல்

157

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சமகாலத்தில் வீடு வீடாக செல்லும் நாமல், மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொழும்பு நகர சபைக்காக பொதுஜன முன்னணிக்கான தேர்தல் பிரச்சாரத்தை நாமல் ஆரம்பித்துள்ளார்.

தனது தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு அபிவிருத்தியை சமகால அரசாங்கம் நிறுத்தியுள்ளது. எனினும் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அபிவிருத்தி நடவடிக்கையை முன்நோக்கி கொண்டு செல்லவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது இளவரசராக தன்னை பிரகடனப்படுத்திய நாமல், ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தற்போது ஆட்சி அதிகாரங்கள் இழக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வீடு வீடாக அலைவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.