கரை கடந்து தடுத்து வைக்க 1 வருடத்திற்கு 1 பில்லியன் –

112

பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை கரைகடந்து தடுத்து வைப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் 1 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளன.

இது அவஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் 4ல் ஒரு பங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் ஏதிலிகளாக செல்கின்றவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம், மானஸ் மற்றும் நவுறு தீவுகளில்கடந்த ஆண்டு வரையில்தடுத்து வைத்தது.

இதற்கான செலவாக, அவுஸ்திரேலிய வரி செலுத்துனர்களின் 1.08 பில்லியன் டொலர்கள் பணம் செலவாகியுள்ளது.

அதேநேரம் நாட்டின் எல்லைக்குள்ளேயே ஏதிலிகளை தடுத்து வைத்தல், கடல்எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக 2.63 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.