சிவனொளிபாதமலைக்கு போதை குளிசைகளுடன் சென்றவர்கள் காத்திருந்த அதிர்ச்சி –

42

பொது அறிவுப்போட்டி 2018Sltnews

அட்டன் நல்லத்தண்ணி சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்குச் சென்றவர்கள் சட்டவிரோத போதை பொருட்களை வைத்திருந்தார்கள் என தெரிவித்து 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த சில தினங்களில் காவல் துறையினர் மேற்கொண்டு விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 50 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாத்திரைக்காக வருபவர்கள் எதிர்வரும் காலங்களில் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என நல்லத்தண்ணி காவல் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.