கூட்டமைப்புக்கு வாக்களித்தால் இது தான் பொருள்!

52
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இடைகால அறிக்கையை நாமும் ஆதரிப்பதாகிவிடும் என கிளிநொச்சி அமைப்பாளரும், முதன்மை வேட்பாளருமான தங்கவேல் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “அண்மைக்காலத்தில் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட இருக்கின்றது. இப்பொழுது வந்துள்ள இடைக்கால அறிக்கையின் அங்கீகாரமாக இத்தேர்தல் வெற்றி பார்க்கப்படப் போகின்றது.

நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்களோ அவர்கள் கொண்டுள்ள கொள்கை இடைக்கால சீர்திருத்தத்தின் மீது கொண்டுள்ள கொள்கையாகப் பார்க்கப்பட இருக்கின்றது.

நீங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால் அவர்கள் இடைகால நிர்வாக வரைபை ஆதரித்திருக்கின்றார்கள். மக்களும் ஆதரிக்கின்றார்கள் என்ற ஒரு செய்தி வெளியே வரப்போகின்றது

தேசிய அரசியலைப் பொறுத்தவரையிலே மிகவும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு தேர்தலாக இத் தேர்தல் அமைகிறது. இது வெறுமனவே ஒரு உள்ளூராட்சித் தேர்தல் என மட்டும் கருதிவிட கூடாது.

பொது மக்கள் கட்சியையும், சிறந்த வேட்பாளரையும் பார்த்து வாக்களிக்க வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் 2010 பின்னர் நடந்த தேர்தலில் அவர்கள் மூன்று சபைகளையும் கைப்பற்றி அரசியல் செய்து வருகின்றார்கள்.

ஆனாலும் இன்று வரை குறிப்பிட்டு சொல்லக் கூடிய இந்தவித அபிவிருத்தியையும் செய்யவில்லை. அதே போல ஊழல் மலிந்த, அதிகார துஸ்பிரயோகம் மலிந்த, பெண்களை இழிவு படுத்தக்கூடிய நிர்வாகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தமுறை தேர்தல் சீர்திருத்தங்கள் சிறப்பாக வந்திருக்கின்றது. எமது நோக்கம் தேசிய அரசியலில் எமது கொள்கைகள் நேர்த்தியாக இருக்கின்றது.

இந்த உள்ளூராட்சியில் ஊழல் அற்ற அதிகார துஸ்பிரயோகம் அற்ற உள்ளூர் அபிவிருத்திகளுடன் கூடிய ஒரு மக்கள் நேய நிர்வாகத்தை அமைப்போம். எமது வெற்றி மக்களின் வெற்றி” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.