சுயேட்சைக்குழுவை எதிர்கொள்ள முடியாத கூட்டமைப்பின் சதிக்கு பலியாகிறதா புதுக்குடியிருப்பு?

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவதற்கு கூட்டமைப்பு நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றமை பிரதேச மக்கள் மத்தியில் பலத்த விமர்சனத்தை தோற்றுவித்திருக்கிறது.

Loading...

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கவுள்ள பிரதேச சபைகளில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த சவாலாக விளங்கிவருவதாக பரவாலக பேசப்பட்டுவருகின்றது.

இநத நிலையில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதே குற்றச்சாட்டைச் சுமத்தி புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தேர்தலை இடைநிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் திணைக்களத்தினை நாடியிருப்பதாக தெரியவருகின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கான தேர்தலில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புளொட் அமைப்பின் ஊடாக தமிழரசுக்கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணினை முன்னாள் ஈபிஆர்எல்எப் உறுப்பினரும் தற்போதைய தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய அடியாள் மூலம் கடத்தி தடுத்துவைத்திருந்தார்.

பெண் கடத்தப்பட்டிருந்த நேரத்தில் பிறிதொருவரை வேட்பாளராக்கி வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டிருந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆலோசனைக்கமைய அந்த நபரை விடுவிப்பதற்கான முயற்சியில் மீண்டும் அடியாட்களை ஏவிய சிவமோகன் குறித்த பெண்ணை வழக்கினை வாபஸ்பெறச் செய்திருந்தார்.

இவ்வாறு இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் திணைக்கத்திற்கு குறித்தவிடயத்தினை கொண்டு சென்றிருக்கின்றமை தொடர்பில் தெரியவந்திருக்கிறது.

புதுக்குடியிருப்பில் “வண்டில்“ சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பலத்த சவாலாக விளங்கிவருகின்ற நிலையில் குறித்த போட்டியாளர்களை விலைகொடுத்துவாங்கவும் மிரட்டவும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் ஏனைய கட்சிகளும் மேற்கொண்ட முயற்சிகளும் கைகூடவில்லை.

இந்த நிலையில் தேர்தலை நிறுத்துவதற்காகவே புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் செய்திருந்த முறைப்பாட்டினை மீளப் பெற வலியுறுத்திய கூட்டமைப்பினர், தேர்தல் வன்முறை எனத் தெரிவித்து தேர்தல்கள் திணைக்களத்திற்கு விடயத்தினைக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

தாம் உத்தமர்கள் போலக் காட்டிக்கொண்டு தேர்தலை இடைநிறுத்துவதே குறித்த சம்பவத்தின் பின்னணி என்று நம்பரமாகத் தெரியவந்திருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய சதிநடவடிக்கையை மேற்கொண்டுவருகின்ற சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தற்போது தமது பிரதேச சபைத் தேர்தலையும் குழப்பி அதிலும் ஆதாயம் தேட முற்படுவதாக விசனம் தெரிவித்துள்ள புதுக்குடியிருப்பு மக்கள் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் “வண்டில்“ சின்னத்தின் ஊடாக போட்டியிடும் சுயேட்சைக்குழுவின் வெற்றியை தடுக்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர்

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*