ஆப்பிரிக்கா கண்டத்திலே சிம்பாப்வே என்று ஒரு நாடு இருக்கிறது . அங்கு முகாபே என்று ஒருவர் இருந்தார் .எந்த தேர்தல் வைத்தாலும் அதில் அவர்தான் வெற்றி. ஏதாவது ஜில்மால் விளையாட்டு காட்டிவிடுவார்!!

அசைக்க முடியாது.

எவ்வளவோ கஷ்டப்பட்டு எதிர்க்கட்சிகளால் ஒன்றும் புடுங்கவே முடியவில்லை.

பொறுத்து பொறுத்துப்போன எதிர்கட்சிகள், கடைசியில், கடும் போராட்டமெல்லாம் பண்ணி, அடுத்த தேர்தலுக்கு, குளறுபடிகளை தவிர்க்க இலத்திரனியல் வாக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற யோசனைக்கு முகாபேயை இணங்க பண்ணின.

ஆனால், பாவம் , அவர்களிடம் அந்த இயந்திரமும் இல்லை, அது வாங்க பணமும் இல்லை .

இந்தியாவில் அந்த இயந்திரம் இருக்கிறது எடுத்துத்தரவா என்று முகாபே கேட்டார்.

நோ நோ, அங்கு மோடி இருக்கிறார் . அந்த இயந்திரத்திலேயே மோசடி விளையாட்டு காட்டி, அவர் தேர்தலில் வெல்லுவார். ஆகவே அந்த இயந்திரம் வேண்டாம் என்று முடிவாகியது .

அங்க இங்க எண்டு திரிந்து , கடைசியாக , இலங்கையில் எடுப்போம் என்று முகாபே சொன்னார் .

“ஹா ஹா ஹ, அங்கு மகிந்த இருக்கிறார், அவருக்கு தெரியாத மோசடியா?இயந்திரத்தையே அப்படி டிசைன் செய்து வைத்திருப்பார், அதுவும் வேண்டாம் என்றன சிம்பாப்வே எதிர்க்கட்சிகள்.

இறுதியாக, சரி தென்னிலங்கை மிசின் தான் வேண்டாம். வட இலங்கையில் நேர்மையான ஆட்கள் இருக்கினம் . அப்ப அங்க தேர்தல்ல பாவிக்கிற மிசின் எடுப்பம் என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

வட இலங்கையில் பாவிக்கப்படுகிற அமெரிக்க தயாரிப்பு நவீன வாக்கு பதிவு மிஷின் அது, made in America!!

வெற்றி எண்ணிக்கையை அப்படியே ஒருவரது தலையீடும் இன்றி அச்சுப்பிசகாமல் வெளியிட்டுவிடும்.

சரி , சிம்பாப்வே தேர்தலும் வந்தது. எல்லாருக்கும் சரியான எக்சைட்டிங்காக இருக்கிறது. இருக்காதா பின்னே, முதல்தடவையாக நேர்மையான வாக்கு எண்ணுதல் இயந்திரத்தின் உதவியுடன் நடக்க போகிறது!!

எதிர்கட்சிகள் ரென்சனின் உச்சத்தில் இருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகுவதற்கான பச்சை விளக்கு எரியத்தொடங்கியது.

ரொபேட் முகாபே, தன் விரல் நகம் அனைத்தையும் கடித்து முடித்துவிட்டார். அவ்வளவு ரென்சன். வடக்கு இலங்கை தேர்தல்களில் பாவித்த நேர்மையான மிசின் அல்லவா

திக் திக் நிமிடங்கள்.

பச்சைவிளக்கு மூன்று தரம் எரிந்து அணைந்தது .

தேர்தல் ஆணையாளர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்பட்ட முடிவுகளை உரத்த குரலில் வாசிக்க வெளிக்கிட்டார்….

அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்…

எல்லா மிசினிலும் “ சுமந்திரன் அமோக வெற்றி “ என்று முடிவுகளை தந்து கொண்டிருந்தது அந்த மிசின்!!

பி.கு:- உண்மை போல தோன்றினாலும் இது கற்பனைக்கதையே என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறோம்.

( கதை மூலப்பிரதிBalan Chandran

வெளியிட்டுமகிழ்ந்தது:- எள்ளெண்ணெய் பேப்ப்ர் 31/12/17)

13Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*