தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த 12 வயது மகள்

உத்திரபரதேசத்தில் தாயை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது மகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் பத்தீபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கம்ரூல் நிஷா. திருமணமாகி பல நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் 12 வருடத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். முஹமது மும்பையில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவியும் வளர்ப்பு மகளும் பத்திபூரில் தனியாக வசித்து வந்தனர்.

மகள் பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொண்டு, ஊர்சுற்றியதால் அவரை தாய் கம்ரூல் நிஷா கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தனது வளர்ப்பு தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிஷாவின் உடலை கைபற்றி, வளர்ப்பு மகளை கைது செய்தனர்.

41Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*