மைத்திரியுடன் ஆமாம் போட்ட மூத்த அமைச்சர்கள்

73

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது கூட்டு எதிர்க்கட்சி பற்றிய பேச்சும் வந்ததாம். “”நான் எவ்வளவோ இறங்கிவந்தேன். ஆனால், அவர்கள் நிறைவேற்றமுடியாத கோரிக்கைகளை முன்வைத்தனர்” என்றாராம் ஜனாதிபதி.

“”ஆமாம் சேர்… மஹிந்த எங்களுடன் இணையவே இருந்தார். ஆனால், நாமலும் பஸிலும்தான் எல்லாவற்றையும் குழப்புகின்றனர்… அவர்கள் இருக்கும்வரை எதுவும் உருப்படப்போவதில்லை” என்று அங்கிருந்த அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் கூறினாராம்.