ஹம்பாந்தோட்டை விமான நிலையம் இந்தியாவிற்கு!

216
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் இந்தியா முதலீடு செய்வதற்கான வழிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மயில் உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் வலம் வருகின்ற ஒரு இடமாகவே காணப்பட்டது.

இதனை ஒரு பொருளாதார வளமிக்க இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக நானும் பல முறை சீனா சென்று வந்துள்ளேன்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் பல்வேறு தவறுகள் இருந்தாலும் அதனை நாட்டுக்குப் பயனுள்ள இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நாம் இதில் இந்தியா முதலான நாடுகள் முதலீடு செய்வதற்காக வழிகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.