இன்றிரவு வானில் ஏற்படும் மாற்றம்!

320
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

இலங்கையின் நேரடிப்படி இன்றிரவு 10.26 அளவில் பூமிக்கு அருகில் விண்கல் ஒன்று கடந்து செல்லும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பேருந்து அளவுள்ள இந்த விண்கல், 2017 YZ4 என பெயரிட்ப்பட்டுள்ளது. இந்த விண்கல், பூமிக்கும் நிலவுக்கும் இடையில் பூமியில் இருந்து 224,000 கிலோ மீற்றர் தொலைவில் பயணிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

44 அடி பெரிய 22.6 அடி நீளமான இந்த விண்கல், மணிக்கு 34 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கல், எரிசோனாவில் உள்ள மவுண்ட் லேமோன் விண்வெளி கண்காணிப்பு நிலையத்தின் ஊடாக முதலில் அடையாளம் காணப்பட்டது.

இந்த வருடத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையில் பயணிக்கும் 52 வது விண்கல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.