ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

63
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரபல செயற்பாட்டாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹஜன ஐக்கிய முன்னணியின் உப தலைவர் சோமவீர சந்ரசிறி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இன்று (28) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்த அவர், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரபல நன்கொடையாளரும் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் இரு அபேட்சகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று ஜனாதிபதியை சந்தித்து அவரது செயற்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கோட்டே பிரதேச முன்னாள் நகர சபை உறுப்பினரும் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பொதுஜன முன்னணி சார்பில் கோட்டே நகர சபைக்கு போட்டியிடவிருந்த அபேட்சகர் ராஜா சூரியகுமார, பொதுஜன முன்னணி சார்பில் மிரிஹான பிரதேச சபைக்கு போட்டியிடவிருந்த அபேட்சகரான மிரிஹான பொதுஜன முன்னணியின் கிளை தலைவர் சசித்ர அமரசேகர உள்ளிட்டோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்.

மகரகம ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நகர சபை உறுப்பினர் லக்கி தர்மசேன, மகரகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட முகாமையாளர் பியசேன பெரேரா உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சிக்காக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குழுவினரும் இன்று ஜனாதிபதி அவர்களை சந்தித்து அவரது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளரும் அரசியல் சபை பிரதி செயலாளருமான நிமல் பிரேமவங்ச ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அமைப்பாளர்கள் சிலரும் இன்று ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டனர்.

மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ப்ரியானி ரத்னாயக்க, மாத்தறை மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாலின்பட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஞானசிறி வித்தானகே, சட்டத்தரணி ஷின்தக தர்ஷன ஹேவாபத்திரன மற்றும் மாத்தறை மாவட்ட தோட்டப்பகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட கனகசபை ரவிகுமார ஆகியோரும் இன்று ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Page 2 of 2