க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்ட சாதனையாளர்கள்

216

நேற்று நள்ளிரவு வௌியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இராகலை – ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்றுநுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.

மேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

அருள்மொழிவர்மன், உமா தம்பதியரின் புதல்வனான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.

மேலும் அகில இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

சாத்துமணி, பத்மா தம்பதியரின் புதல்வியான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு வௌியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன் பெற்றுள்ளார்.

தாம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றமை தொடர்பில் அவர் எமது செய்திப்பிரிவிடம் மகிழ்ச்சி வெளியிட்டார்.

விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடத்தினை மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி திலினி சந்துனிகா பலிகக்கார அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றார்.

வணிகப் பிரிவிலும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவியான துலானி ரசன்திகா பெற்றுக் கொண்டார்.

அதேநேரம் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே முனிந்தவங்ச தேரர் பெற்றுக் கொண்டார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் இடத்தை மாத்தறை – மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவர் பாரமி பிரசாதி சத்னசினி ஹெட்டிராச்சி பெற்றுக் கொண்டார்.