தேங்காய்ப்பூவும் பிட்டும் போல் இருந்த முஸ்லிம் – தமிழ் உறவுகளில் விரிசல் – அமைச்சர் ஹிஸ்புல்லா!

13

பிட்டும் தேங்காய்ப்பூவும்போல் இருந்த தமிழ் – முஸ்லிம் உறவில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள விரிசலை மேம்படுத்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென மீள்குடியேற்ற மறுவாழ்வு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார்.

காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்அவர்தெரிவிக்கையில், போரின் பின்னர் தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

30 வருட பயங்கரவாதப் போர் நிலையான சமாதானத்தைக் குழப்பியது. தற்போது போர் நிறைவடைந்த பின்னரும் நிலையான சமாதானம் உருவாகவில்லை.

இவ்வாறான சூழலிலேயே இனவாதம் சமூக வலைத்தளங்களூடாக பரப்பப்பட்டு வருகின்றது. இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் எம்மிடமில்லை.

இனவாதத்தைப் பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சனையைத் தோற்றுவிப்பதன்மூலம் சிலர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றார்கள்.

தேங்­காய் பூவும் பிட்­டும் போல் இருந்த தமிழ் – முஸ்­லிம் மக்­க­ளி­டையே தற்­போது பெரிய விரி­சல் ஏற்­பட்­டுள்­ளது. இத­னைச் சீர் செய்து பழைய நிலைக்கு இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவை கொண்டு செல்­வ­தற்கு சமூக தலை­வர்­கள், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பெரிய பொறுப்­புள்­ளது.

போருக்குப் பின்னர் தமிழ்-சிங்கள இனங்களிடையே உறவை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே உறவை மேம்படுத்தும் முயற்சிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை.