”சொட்கண்”துப்பாக்கி வைத்திருந்தவர் கைது.

164

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்றிரவு(16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சட்டவிரோதமான துப்பாக்கி ஒன்றினை வைத்து வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்ட போதே “சொட்கண் “துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,இன்று(17) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.