ஞானசாரருக்கு எதிராக 3 வழக்குகள்

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் 3 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டன.

Loading...

அல்குர்ஆன் அவமதிப்பு, நிப்போன் ஹோட்டம் அச்சுறுத்தல், பொலநறுவையில் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை தூற்றிப் பேசியமை உள்ளிட்ட 3 வழக்குகளே விசாரணைக்கு வந்தன.

இவற்றில் கொழும் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாத்திரமே ஞானசாரர் ஆஜராகியுள்ளார்.

எனினும் குறித்த வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கைகளோ அல்லது குற்றப் பத்திரமோ தாக்கல் செய்யப்படாத நிலையில், 3 வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஞானசாரருக்கு எதிரான மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் வழிநடத்தலில், முஸ்லிம் சட்டத்தரணிகள் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*