மகிந்தவின் முக்கிய விக்கட் OUT…

80
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சூடுபிடித்துவருகின்ற நிலையில் தென்னிலங்கை அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்கள் விரைவில் ஏற்படக்கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக எதிர்வரும் தேர்தலின் ஆளுமையைக்காட்ட மஹிந்த பொதுஜன முன்னணியினூடாக தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அதேசமயம் கூட்டு எதிர்கட்சி சார்ந்தவர்கள் மைத்திரி பக்கம் இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

அதேபோன்று தேர்தலுக்கான மஹிந்த தரப்பு நேற்று முக்கிய ஆலோசனைக்கூட்டத்தில், அவருடைய இல்லத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இந்த கூட்டத்திற்கு மஹிந்தவின் முக்கிய ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வருகை தரவில்லை.

அண்மைக்காலமாக விமலின் அரசியல் கருத்து வெளிப்படுத்தல்கள் சற்று குறைவடைந்து விட்டதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மஹிந்தவின் முக்கிய பங்காளியான விமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய முக்கியஸ்தர்கள் தாம் சுதந்திரக்கட்சியில் இணைந்துக் கொள்ளப்போவதில்லை என அழுத்திக் கூறிவருகின்றனர்.

இந்த விடயம் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சிக்குள் கட்சித் தாவல்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதை வெளிப்படையாக காட்டுவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் கூட்டு எதிர்க்கட்சில் இருந்து மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பு கட்சித்தாவலில் ஈடுபட்டால் அது மஹிந்தவிற்கு இக்கட்டான நிலையை தோற்றுவிக்கக் கூடும்.

இவ்வாறான நிலைமை காணப்படுவதன் காரணமாக கோட்டாபயவை அரசியலில் ஈடுபடவைக்கவும் முயற்சிகள் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு கோட்டாபய அரசியலில் ஈடுபடுவார் என்றால் அது மைத்திரி, ரணில் தரப்பிற்கு பேரிடியாக அமைந்து விடக்கூடும். காரணம் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையில் கோட்டாபயவிற்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கே எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் திடீர் மாற்றங்களைச் சந்திக்கும் நிலையிலேயே தெற்கு அரசியலும் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.