400 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்துள்ள பரபரப்பான சம்பவம்..

709

400 வருடங்களுக்கு முன்னர் இட்ட சாபத்திலிருந்து மைசூர் மன்னரின் பரப்பரை சாபமுக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1612ம் ஆண்டு மைசூரை, விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த திருமலைராஜாவிடம் இருந்து, ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார்.

ராஜ நகைகளுடன் தப்பிய திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் உடையார் பரம்பரைக்கு ஒரு சாபம் அளித்தார். ‘தலக்காடு மண்ணாக போகட்டும்; காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்’ என்பது அவரது சாபமாகும்.

மைசூர் பகுதியில் கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் இந்த சாபம் மீது நம்பிக்கை உள்ளது.

அதற்கு ஏற்றவாறு மைசூர் உடையார் மன்னர் குடும்பத்தில் வாரிசு சிக்கலும் இருந்து வருகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற போது மைசூர் மாகாண மன்னராக இருந்தவர் ஜெயசாமராஜேந்திர உடையார்.

வாரிசு இல்லாததால் அவர் கண்டதத்த நரசிம்ம உடையாரை தனது மகனாக தத்தெடுத்தார்.

அவர், 1974ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார்.

கந்ததத்தா நரசிம்மராஜ உடையார் கடந்த, 2013ம் ஆண்டு காலமானார்.

அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை.

எனவே, அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ், என்ற 23 வயதுடைய அவர் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மைசூரின், 27 வது மன்னராக முடிசூட்டப்பட்ட அவருக்கு யதுவீர கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என புதிய பெயர் சூட்டப்பட்டது.

அவருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன், 27 ம்தேதி திருமணம் நடந்தது.

பெங்களூரில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில், திரிஷா தேவிக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதன் மூலம், மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் பரப்பரைக்கான சாபமுக்தி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்துள்ள பரபரப்பான சம்பவம்.. நேற்று இரவு நடந்துள்ளது… ; பெரும் ஆச்சரியம்.