“சேர், பிரபாகரன் இதோ ” “இதோ பிரபாகரன் சேர்” “சேர் நாங்கள் அவனது கதையை முடித்துவிட்டோம்” “போர் முடிந்து விட்டது சேர்”

(4)

படைவீரர்கள் அந்த உடலை எனது காலடியில் கொண்டு வந்து போட்ட அடுத்த நொடியே அது பிரபாகரன்தான் என்பதை கண்டுகொண்டேன். இன்று கூட நான் இதை மிகைப்படுத்தி கூறவில்லை. அந்த தருணத்தை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் கூட எனது உடல் சிலிர்கும். அந்த உடலையும் தலையில் இருந்த ஆழமான வெட்டுக்காயத்தை அகழத்திறந்த கண்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டேயிருந்தேன். நிச்சயமாக இது பிரபாகரந்தான். எங்கள் தேசத்தின் மீது மூன்று தசாப்தங்களாக பெருத்த நாசத்தை கட்டவிழ்த்து விட்டு வலியை தந்து கொண்டிருந்த அதே பிரபாகரன்தான். வயது, பால், இனம், மதம் என எதனையுமே கனக்கில் கொள்ளாது அப்பாவி பொதுமக்களை இரத்தம் தோயத்தோய கொன்று குவித்த, சிங்கள மக்களையும் இந்த நாட்டையும் இனவெறிபிடித்தவர்கள் என கூறித்திரிந்த, இந்த நாட்டை பீடித்திருந்த தசாப்த கால சாபமான கசாப்பு கடைக்காரனான அதே பிரபாகரன்தான் இது.

இரக்கமற்ற அந்த மனிதனை இங்கே கொண்டுவந்து போட்ட படையினர் எனது கட்டளைக்கு கீழே பணிபுரிவதை நினைக்கும் போது,ம், ஒரு நாயை போன்று அநத மனிதன் இங்கே எனது காலடியில் கிடப்பதை பார்க்கும் போதும் நான் உணர்ந்த பெருமையை அநேகமாக நீங்களும் கற்பனை செய்து கொள்ள முடியும். இங்கே என் முன்பாக அவனை கொண்டுவந்து நிலத்தில் போட்ட பின்பும் மகிழ்ச்சி ஆரவாரம் குறையவே இல்லை. அவர்கள் உரத்த குரலில் கத்திக்கொண்டே இருந்தார்கள்.

“சேர், பிரபாகரன் இதோ ”

“இதோ பிரபாகரன் சேர்”

“சேர் நாங்கள் அவனது கதையை முடித்துவிட்டோம்”

“போர் முடிந்து விட்டது சேர்”

படையினரின் மகிழச்சி கோசம் நந்தி கடல் நீரேரி எங்கும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

ஆரம்பத்தில் இருந்து இந்த இறுதி முடிவு வரை பெரும் சமர்களில் போரிட்ட படையின் ஒரு அதிகாரியாக நான் இப்படியொரு இனிப்பான தருணத்தை என் வாழ்நாட்களில் அனுபவித்திருக்கவில்லை. பிரபாகரனை எனது படைகள் கொன்றுபோட்டிருந்தாலும் இது என்னால் மட்டுமே நடந்ததல்ல எனபதை நான் மனபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த போருக்காக பெரிரும் பக்காற்றிய ஏனைய படையணிகளின் தளபதிகளின் உன்னத பங்களிப்புக்காக அவர்கள் காதுகளால் கேட்பதற்காகவே இந்த செய்தி பெரும் புதையலாக இருந்தது. இந்த பெரும் மகிழ்ச்சியான தருணத்தை நான் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் பிரிகேடியர்களான சவீந்திர சில்வா,மற்றும் சாகி கலகே ஆகியோரை தனிப்பட்ட முறையில் நானே அழைத்து பிரபாகரனின் மரணத்தை அறிவித்தேன். உடல் இங்கே எனது காலடியில்தான் கிடக்கின்றது உடனேயே புறப்பட்டு வாருங்கள் என அழைத்தேன்.

இந்த நேரத்தில் நான் 681வது படைகளின் தளபதி லெப்,கேணல் லாலந்த கமகே பற்றிய இன்னுமொரு சிறப்பான கதையையும் இங்கே கூறியாக வேண்டும். இந்த நாளுக்குக்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வான் நகர்வு படை கட்டளை அதிகாரி லெப்.கேணல் திலக் ஹங்லிபொலவுக்கும் 681வது படைகளின் தளபதி லெப்,கேணல் லாலந்த கமகேவுக்கும் எனது 53வது படையணியின் தாக்குதல் இலக்குகளை கொடுத்திருந்தேன். புதுகுடியிருப்பை கைப்பற்ரும் முயற்சியில் இந்த இரண்டு படைகளும் பெருத்த இழப்புக்களை சந்தித்துக்கொண்டிருந்தாலும் அதி உச்சதீரத்துடன் போரிட்டு கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் திலக் ஹங்கிலிபொலவின் படையினர் எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் கைப்பற்றி குவித்துக்கொண்டிருந்தனர். ஆனால் லாலந்த கமகேவின் 681வது படையினர் அவவாறு பெரிதாக ஒன்றையும் கைப்பற்றுவதில்லை. ஒரு நாள் கூட்டத்தில் நான் வெளிப்படையாகவே அவருக்கு சவால் விடுத்தேன். “ லாலந்த, என்ன இது? திலகின் படையினர் ஆயுதங்களை அள்ளிக்கொண்டு வருகின்றனர். ஆனால் உன்னுடைய படைகள் ஒன்றையும் கொண்டுவருவதில்லையே? ஏதோ தப்பு நடக்கின்றது.” என கூறினேன். அவரை ஊக்கப்படுத்துவதற்காகவே நான் அப்படி கூறினாலும் அது அவரது மனதை காயப்படுத்தியது. மனமுடைந்து போன அவர் சிறிது நேரம் என்னை பார்த்தார். பின் “ சரி சேர் நான் பிரபாகரனின் விமானங்களில் ஒன்றை கொண்டுவருகின்றேன்” என்றார். இதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். ஒரு மாதத்தின் பின் “ லலந்த நீ எனக்கு வாகளித்தபடி பிரபாகரனின் விமானம் எங்கே?” என கிண்டலாக அவருக்கு கேட்டேன். இப்போதும் அதே போன்று சிறிது நேரம் என்னை பார்த்தார். அதன் பின் “ சேர் பிரபாகரனின் விமானத்தை அல்ல பிரபாகரனையே உங்களுக்காக கொண்டுவருவேன்.” என கூறினார்.

சரித்திர முக்கியத்தும்வாய்ந்த இந்த நாளில் லலந்த பிரபாகரனின் உடலுட்ன் என்னை நோக்கி வந்து. “ சேர் உங்களுக்காக நான் பிரபாகரனை கொண்டுவருவேன் என கூறினேன அல்லவா? இதோ பிரபாகரனை கொண்டுவந்துவிட்டேன் சேர்” என பெருமையுடன் கூறினார். அந்த நொடியில் வாய்விட்டு கூறமுடியாத மகிழ்ச்சியாலும் சகோதர வாஞ்சையாலும் எனது இதயம் நொறுங்கியே போய்விட்டது. அவரை ஆரத்த தழுவிக்கொண்டேன்.

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal)

#Road_to_Nandikkadal

( பலர் கேட்டுக்கொண்டதற்காக மட்டும்..)

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*